< Back
மாநில செய்திகள்
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
26 March 2023 6:45 PM GMT

தியாகதுருகம் அருகே அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே அசகளத்தூரில் பிரசித்திபெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேர் திருவிழா கடந்த 17-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வீதிஉலா நடைபெற்று வந்தது. மேலும் மயானக்கொள்ளை நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேர்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். அப்போது அங்கிருந்த பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்