< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளியில் ரத்தசோகை பரிசோதனை முகாம்
கடலூர்
மாநில செய்திகள்

அரசு பள்ளியில் ரத்தசோகை பரிசோதனை முகாம்

தினத்தந்தி
|
18 Jun 2023 12:15 AM IST

மங்கலம்பேட்டை அரசு பள்ளியில் ரத்தசோகை பரிசோதனை முகாம் நடந்தது.

விருத்தாசலம்,

மங்கலம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரத்தசோகை பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாலச்சந்தர் தலைமை தாங்கினார். இதில் டாக்டர்கள் லாவண்யா, ஜெயகோபி, சரவணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் முருகவேல், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர் கலந்துகொண்டு 150-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு ரத்த சோகை பரிசோதனை செய்து உரிய சிகிச்சை அளித்தனர். முகாமில் பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்