< Back
மாநில செய்திகள்
ஏழுமலையானுக்கு அணிவிக்க ஆண்டாள் சூடிய மாைல
விருதுநகர்
மாநில செய்திகள்

ஏழுமலையானுக்கு அணிவிக்க ஆண்டாள் சூடிய மாைல

தினத்தந்தி
|
21 Sept 2023 2:34 AM IST

ஏழுமலையானுக்கு அணிவிக்க ஆண்டாள் சூடிய மாைல நேற்று திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஏழுமலையானுக்கு அணிவிக்க ஆண்டாள் சூடிய மாைல நேற்று திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆண்டாள் சூடிய மாலை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஆண்டுதோறும் திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் கருட சேவையின் போது ஏழுமலையானுக்கு சாத்துவதற்காக ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி மற்றும் வஸ்திரம் கொண்டு செல்வது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டு திருப்பதிக்கு மாலை அனுப்பும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. அப்போது ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதன் பிறகு திருப்பதி ஏழுமலையான் அணிந்து கொள்ளக்கூடிய மாலை மற்றும் கிளியை ஆண்டாள் அணிந்து சூடிக்கொடுத்தார்.

அனுப்பி வைப்பு

அதன் பிறகு பெரிய கூடையில் வைத்து ஆண்டாள் மாலை மற்றும் கிளி ஊர்வலமாக யானையின் மூலமாக எடுத்து செல்லப்பட்டது. பின்னர் கார் மூலம் திருப்பதிக்கு மாலை அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாச்சியார் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் ராம்கோ நிறுவனம் செய்திருந்தது. இதில் ஆண்டாள் கோவில் அறங்காவலர்கள் ராம்குமார், நளாயினி, மனோகரன், உமாராணி, கோவில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை (வெள்ளிக்கிழமை) திருமலையில் நடைபெறும் கருட சேவையின் போது திருப்பதி ஏழுமலையான் இந்த மாலையை சாத்திக் கொண்டு வீதி உலா வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்