< Back
மாநில செய்திகள்
வெம்பக்கோட்டை அகழாய்வில் எலும்பினால் செய்த நட்சத்திர வடிவ பழங்கால ஆபரணம் கண்டெடுப்பு
மாநில செய்திகள்

வெம்பக்கோட்டை அகழாய்வில் எலும்பினால் செய்த நட்சத்திர வடிவ பழங்கால ஆபரணம் கண்டெடுப்பு

தினத்தந்தி
|
13 Sept 2024 7:21 AM IST

வெம்பக்கோட்டை அகழாய்வில் எலும்பினால் செய்த நட்சத்திர வடிவ பழங்கால ஆபரணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த அகழாய்வில் இதுவரை சுடுமண் பொம்மைகள், சுடுமண் காதணி, சங்கு வளையல்கள் செய்ய பயன்படுத்திய மூலப்பொருள், செவ்வந்தி கல், செங்கல்கள், எலும்புகள், தீப விளக்குகள், சில்லுவட்டுகள், புகைப்பான் கருவி உள்பட 1700-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில், வெம்பக்கோட்டை அகழாய்வில் ஒருவித எலும்பால் செய்யப்பட்ட நட்சத்திர வடிவிலான மஞ்சள் நிற பழங்கால பெண்கள் ஆபரணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இதுபோல் நீள் வட்ட வடிவில் கலை நயத்துடன் செய்த சுடுமண் பொருள் ஒன்றும் கிடைத்துள்ளது. இதையும் பழங்காலத்தில் பெண்கள் ஆபரணமாக பயன்படுத்தி இருக்கலாம் என தெரியவருகிறது.

3-ம் கட்ட அகழாய்வில் பெண்கள் அணியக்கூடிய பழங்கால ஆபரணங்கள் அதிக அளவில் கிடைத்து வருவதாகவும், இதனை பார்க்கும் போது இப்பகுதியில் ஆபரணங்கள் செய்யும் தொழிற்சாலை இருந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் அகழாய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்