< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழ்நாட்டின் காவல்துறை தலைமை இயக்குநராக பொறுப்பேற்ற சங்கர் ஜிவாலுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து...!
|30 Jun 2023 9:45 PM IST
தமிழ்நாட்டின் காவல்துறை தலைமை இயக்குநராக பொறுப்பேற்ற சங்கர் ஜிவாலுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
தமிழ்நாட்டின் காவல்த்துறை தலைமை இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் திரு. சங்கர் ஜிவால் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் இருக்கை தலைசிறந்த அதிகாரிகளால் அலங்கரிக்கப்பட்டது. அந்த இருக்கையில் அமர்ந்திருக்கும் திரு.சங்கர் ஜிவால் அவர்கள் அனைவருக்கும் பொதுவானவராக செயல்பட்டு தமிழகத்தில் அமைதி, பொது ஒழுங்கை பாதுகாத்து, போதை பொருட்கள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பாமக அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.