< Back
மாநில செய்திகள்
ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு அன்புமணி ராமதாஸ்  வாழ்த்து
மாநில செய்திகள்

ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

தினத்தந்தி
|
9 Aug 2024 11:37 AM IST

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாரீஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில்,

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளின் ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றிருப்பது இந்தியர்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டோக்கியோவில் கடந்த முறை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ரா, இப்போதும் வெள்ளி வென்று இந்தியாவுக்கு சிறப்பு சேர்த்துள்ளார். அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற சுதந்திர இந்தியாவின் முதல் தடகள வீரர் என்ற பெருமையையும் சோப்ரா வென்றுள்ளார். ஒலிம்பிக் அரங்கில் இந்தியாவின் கொடியை உயர்த்திப் பிடித்த சோப்ராவுக்கு மீண்டும் ஒரு வாழ்த்துகள். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்