< Back
மாநில செய்திகள்
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

தினத்தந்தி
|
29 Sept 2024 5:33 PM IST

துணை முதல்-அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்கும்போதே உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பு ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை. கடந்த 2022-ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை வழங்கப்பட்டது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கவேண்டும் என்று முக்கிய அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர். இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது துணை முதல்-அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

துணை முதல்-அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டின் துணை முதல்-அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பணி சிறக்கவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும் எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்