< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'நீர்வளத்துறை பணிகள் குறித்து அன்புமணிக்கு முழுமையாக தெரியாது' - அமைச்சர் துரைமுருகன்
|22 Aug 2024 7:33 PM IST
நீர்வளத்துறை பணிகள் குறித்து அன்புமணிக்கு முழுமையாக தெரியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், தமிழ்நாட்டில் நீர்வளத்துறையில் வளர்ச்சி இல்லை என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், "நீர்வளத்துறை பணிகள் குறித்து அன்புமணிக்கு முழுமையாக தெரியாது. தமிழ்நாட்டில் அணைகள் கட்டுவதற்கு இடமே இல்லாத அளவிற்கு, 48 அணைகளை கட்டியுள்ளோம். காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரங்களில் தீர்வு கண்டிருக்கிறோம். அதைப் பற்றி தெரியாமல் அன்புமணி பேசுகிறார்" என்று தெரிவித்தார்.