செங்கல்பட்டு
வன்னியர்களுக்கு 10.5 இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றக்கோரி அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு பிரசாரம்
|வன்னியர்களுக்கு 10.5 இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றக்கோரி அன்புமணி ராமதாஸ் தபால் மூலம் கடிதம் அனுப்பி நூதன முறையில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வன்னியர்களுக்கு 10.5 சதவித இடஒதுக்கீட்டை அமல்படுத்தக்கோரி தமிழகம் முழுவதும் பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பாரதிராசன் ஆகியோருக்கு தபால் மூலம் கடிதம் அனுப்பி நூதன முறையில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ.வும் வன்னியர் சங்க மாநில துணை தலைவருமான திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமையில், பா.ம.க. மாவட்ட செயலாளர் ஏழுமலை, மாவட்ட மாணவரணி தலைவர் சுந்தர், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராதா, பி.வி.கே.வாசு, ஏகாம்பரம், கணேசமூர்த்தி முன்னிலையில் பா.ம.க. தலைவர் அன்புமணிராமதாஸ் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் நேரில் சென்று வன்னியர்களுக்கு தனி உள் இடஒதுக்கீடு இல்லாததால் கல்வி, வேலைவாய்ப்பில் எப்படி பாதிக்கப்படுகின்றனர் என்பதை எடுத்துரைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், பிற்படுத்தப்பட்டோர் அணையத்தின் தலைவருக்கும் தனித்தனி கடிதம் அனுப்பகோரி மாதிரி கடிதங்களை வழங்கினார். பின்னர் நடத்த கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணிராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.
இதில் ஒன்றிய கவுன்சிலர் தட்சணாமுர்த்தி, திருப்போரூர் ஒன்றிய செயலாளர் தீனதயாளன், நிர்வாகிகள் ராஜா, மகேஷ், ஜெயராமன், அன்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.