< Back
மாநில செய்திகள்
அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: விசாரிக்க 5 பேர் கொண்ட குழு அமைப்பு
மாநில செய்திகள்

அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: விசாரிக்க 5 பேர் கொண்ட குழு அமைப்பு

தினத்தந்தி
|
19 Feb 2023 3:40 PM IST

அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் தொடர்பாக விசாரிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்,

விழுப்புரம் குண்டலப்புலியூரில் உள்ள அன்புஜோதி ஆசிரமத்தை கேரளா மாநிலம் எர்ணாவூர் ஆழக்கூடா பகுதியை சேர்ந்த ஜூபின்பேபி மற்றும் அவரது மனைவி மரியாஜூபின் ஆகியோர் நிர்வகித்து வந்துள்ளனர்.

இந்த ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டவர்களில் காணாமல் போனவர்கள் பற்றி தினந்தோறும் போலீசுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதன்படி இன்னும் பலர் காணாமல் போயிருக்கக்கூடும் என்று போலீசார் கருதுகிறார்கள். எனவே இந்த ஆசிரமத்தில் யார், யாரெல்லாம் மாயமாகியுள்ளனர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஆசிரமம் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளர் கோமதி தலைமையில் 4 ஆய்வாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு வழக்கு தொடர்பான விசாரணையை நாளை தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்