"மாணவர்களை நன்றாக படிக்க வைத்து விடு, நான் வாழ வைத்து விடுகிறேன் என்று முதல்-அமைச்சர் சொன்னார்" - அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
|பெற்றோர்கள் தமது பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு தயது செய்து ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
சென்னை,
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;-
"மாற்றுத்திறனாளிகளைப் பெற்ற பெற்றோர்கள் கடவுளுக்கு சமம். தயவு செய்து நம் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்.
மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் வாங்கும் மதிப்பெண்கள் மட்டுமே அவர்களை மதிப்பீடு செய்யாது, அவர்களின் தனித்திறமையை வளர்ப்பதன் மூலமாக தான் சமுதாயத்தில் அவர்களுக்கென்று ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்று முதல்-அமைச்சர் கூறியிருக்கிறார்.
மேலும் முதல்-அமைச்சர் என்னிடம், 'மாணவர்களை நன்றாக படிக்க வைத்து விடு, அவர்களை நான் வாழ வைத்து விடுகிறேன்' என்று அடிக்கடி சொல்லியிருக்கிறார். எனவே நீங்கள் நன்றாக படியுங்கள்."
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.