< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில் முட்டை விலை வரலாறு காணாத உயர்வு..!
மாநில செய்திகள்

நாமக்கல்லில் முட்டை விலை வரலாறு காணாத உயர்வு..!

தினத்தந்தி
|
2 Jan 2023 9:16 AM IST

தேவை அதிகரிப்பால் முட்டை விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் 5 கோடிக்கும் அதிகமாக முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கோழிகள் மூலம் 4 கோடிக்கும் அதிகமான முட்டைகள் தினசரி உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த முட்டைகள் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில், தேவை அதிகரிப்பால் முட்டை விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது.

அதன்படி முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்ந்து 550 காசுகளுக்கு விற்கப்பட்ட முட்டை விலை 555 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்