< Back
மாநில செய்திகள்
மரண பயம் போக்கும் பாதாள லிங்கம்
மாநில செய்திகள்

மரண பயம் போக்கும் பாதாள லிங்கம்

தினத்தந்தி
|
25 July 2023 2:02 PM IST

சிவபெருமான் வீற்றிருக்கும் முக்கியமான தலங்களில் ஒன்று, திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம். இங்குள்ள மலை மிகவும் பிரசித்திப்பெற்றது.

கார்த்திகை தீபத் திருநாளில் இந்த மலைஉச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். இங்கு சிவெபருமானே மலையாக வீற்றிருப்பதாக ஐதீகம்.இந்த மலையை சித்தர்களும், ஞானிகளும் அரூபமாக வலம் வந்து கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.இந்தியாவில் உள்ள பஞ்ச பூதத் தலங்களில் திருவண்ணாமலை 'அக்னி தல'மாக விளங்குகிறது.ஆணும், பெண்ணும் சமம், சிவமும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்தும் அர்த்தநாரீஸ்வரர் வடிவம் தோன்றியதும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையைக் கொண்டதாக, திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திகழ்கிறது. சிதம்பரத்தை தரிசித்தாலும், காசியில் நீராடினாலும் முக்தி கிடைக்கும் என்பார்கள். அந்த வகையில் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி வந்து சேரும் என்கின்றன புராணங்கள் அனைத்தும். ஒரு முறை இந்த தலத்திற்கு சென்றால் மீண்டும் மீண்டும் செல்வதற்குரிய வாய்ப்பு கிடைக்கும். அப்படி ஒரு அருட்சக்தி இந்த தலத்திற்கு உள்ளதால், இந்த தலம் உள்ள மலையை 'காந்தமலை' என்றும் அழைக்கிறார்கள்.

சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் ஆகியோரது பாடல்பெற்ற திருத்தலமாகும். திருவண்ணாமலையில் பவுர்ணமி, சித்ரா பவுர்ணமி, தீபத்திருவிழா போன்றமுக்கிய நாட்களில் மட்டுமல்ல, எல்லா நாட்களிலும் கிரிவலம் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இத்தலம் சித்தர்களின் சரணாலயம் என்று போற்றப் படுகிறது. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான இடைக்காட்டு சித்தருக்கு, இத்தலத்தில் ஜீவசமாதி அமைந்திருக்கிறது. அருணகிரிநாதர் முருகனின் அருளைப் பெற்று இங்கிருந்துதான் தன்னுடைய ஆன்மிக பயணத்தை தொடங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விருபாஷதேவர், குகைநமச்சிவாயர், குருநமச்சிவாயர், தெய்வசிகாமணி, அருணாசல தேசிகர், மகான் சேஷாத்திரி சுவாமிகள், பகவான் ரமண மகரிஷி, யோகி ராம் சுரத்குமார் என்று எண்ணற்ற மகான்களின் அருளாற்றலைக் கொண்டு திகழ்வது, திருவண்ணாமலை திருத்தலம்.

இத்தகைய புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஐந்தாம் பிரகாரத்தில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ளது, பாதாள லிங்கம். இங்கு 'பாதாள லிங்கேஸ்வரர்' என்ற பெயரில் இறைவன் லிங்க வடிவில் காட்சி தருகிறார். இந்த சிவலிங்கத்தை தரிசனம் செய்ய, சில படிகள் பாதாளத்தில் இறங்கிச் சென்று வழிபட வேண்டும். இந்த சிவலிங்கத்திற்கு முன்பாக நந்தி சிலையும் இருக்கிறது. ஆன்மிக மற்றும் ஞானத்திற்கான தேடலுடன் திருவண்ணாமலைக்கு வந்தவர், ரமண மகரிஷி.அவருக்கு மரணம் பற்றிய எண்ணம் உண்டானபோது, இங்குள்ள பாதாள லிங்கத்தின் சன்னிதியில் சென்று வழிபட்டார். அங்கு ஒரு புற்று இருந்தது.

அதற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதைஉணர்ந்த அவர், அங்கேயே தவத்தில் அமர்ந்து ஞானம் அடைந்ததாக சொல்லப்படுகிறது.மரண பயத்தை போக்கும் இந்த பாதாள லிங்கமும், கிரிவலப் பாதையின் மலைக்கு பின்புறம் அடி அண்ணாமலை என்ற பெயரில் அமைந்த தனி ஆலயத்தில் உள்ள சிவலிங்கமும் விசேஷமானது. இந்த இரண்டு லிங்கங்களையும் மனமுருக வழிபட்டால், மரணபயம்மரண பயம் போக்கும்

பாதாள லிங்கமவிலகும், மன நிறைவு உண்டாகும்.

மேலும் செய்திகள்