< Back
மாநில செய்திகள்
சாலையோரத்தில் கவிழ்ந்த சரக்கு வேன்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

சாலையோரத்தில் கவிழ்ந்த சரக்கு வேன்

தினத்தந்தி
|
28 May 2023 1:00 AM IST

வேடசந்தூர் அருகே அலங்கார பொருட்களை ஏற்றி கொண்டு வந்த சரக்கு வாகனம் கவிழ்த்து விபத்துக்குள்ளானது.

நெல்லையில் இருந்து இருந்து மேடை அலங்கார பொருட்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று, சேலம் நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த வேனை, தர்மபுரியை சேர்ந்த பெரியசாமி (வயது 45) ஓட்டினார். மேலும் 6 பேர் வேனில் பயணம் செய்தனர். திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில், வேடசந்தூரை அடுத்த லட்சுமணன்பட்டி அருகே அதிகாலை 5 மணி அளவில் சரக்கு வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் தாறுமாறாக ஓடியது.

ஒரு கட்டத்தில், சாலையோர பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் பெரியசாமி மற்றும் வேனில் பயணம் செய்த பொன்னுச்சாமி (53) சிவலிங்கம் (45) ஆகியோர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்