< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அரசு பள்ளியில் திரையிடப்பட்ட ஆஸ்காா் வென்ற குறும்படம்
|13 Oct 2022 11:25 PM IST
மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆஸ்காா் விருது பெற்ற 'தி ரெட் பலூன்' குறும்படம் திரையிடப்பட்டது.
மதுரை,
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் மட்டுமல்லாது திரைத்துறை பற்றியும் அதன் நுணுக்கமான செயல்பாடுகள் குறித்தும் அறிந்து கொள்ளும் வகையில் 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்களை அவற்றிற்கென ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் திரையிட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இன்று சிங்காரத் தோப்பு மதுரை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆஸ்காா் விருது பெற்ற 'தி ரெட் பலூன்' குறும்படம் திரையிடப்பட்டது. இதை மாணவர்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.