< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
உடன்குடி வாரச்சந்தையில் பழைய 20 ரூபாய் நோட்டுடன் கடை கடையாய் அலைந்த மூதாட்டி...!
|1 Aug 2022 7:09 PM IST
உடன்குடி வாரச்சந்தையில் பழைய 20 ரூபாய் நோட்டுகளுடன் பேத்திக்கு இனிப்பு வாங்க மூதாட்டி ஒருவர் கடை கடையாக அலைந்தார்.
உடன்குடி,
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் திங்கள் கிழமை தோறும் செயல்படும் வாரச்சந்தை வழக்கம்போல இன்று செயல்பட்டது. இந்த வாரச் சந்தைக்கு சுற்றுபுற கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் வந்திருந்தனர்.
இதில் சுமார் 61 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு, பேத்திக்கு இனிப்பு வாங்குவதற்காக தன்னிடம் இருந்து ரூ 20 நோட்டு 2 கொடுத்து இணிப்பு வாங்கினார்.
கடைக்காரார் இது செல்லாது வேறு ரூபாய் தாருங்கள் என்று கேட்டார். மூதாட்டி மற்றொரு கடைக்கு சென்றார். பின்பு கடை கடையாக சென்றார். யாரும் இந்த 20 ரூபாயை நோட்டை வாங்கவில்லை.