மாந்திரீகம் படித்து மந்திரவாதி ஆவதற்காக 35 சவரன் தங்க நகைகளை திருடிய முதியவர் கைது
|மாந்திரீகம் படித்து மந்திரவாதி ஆவதற்காக 35 சவரன் தங்க நகைகளை திருடிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர்,
கொலை, கொள்ளை வழக்குகளில் சிறை சென்று திரும்பி, மாந்திரீகம் படித்து மந்திரவாதி ஆவதற்காக 35 சவரன் தங்க நகைகளை திருடிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர் நேரு நகரைச் சேர்ந்த பூபதி என்பவர் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று விட்டு, வீடு திரும்பியபோது, வீட்டில் பீரோவில் இருந்த 35 சவரன் தங்க நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், தருமபுரி மாவட்டம், நரசய்யாபுரம் பகுதியைச் சேர்ந்த 76 வயதான முகமது சித்திக் என்ற பொன்னுச்சாமியை கைது செய்தனர்.
பூபதியின் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து, கதவை உடைத்து தங்க நகைகளை திருடிய பொன்னுசாமி, ஏற்கனவே கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் சிக்கி சிறையில் இருந்தவர் என்பது தெரிய வந்தது. மேலும், மாந்திரீகம் படித்து மந்திரவாதி ஆவதற்காக இந்த திருட்டு சம்பவத்தில் அவர் ஈடுபட்டுள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
தொடர்ந்து அவரிடமிருந்து 35 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.