< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை: அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முதியவர் மின்சாரம் பாய்ந்து பலி
மாநில செய்திகள்

திருவண்ணாமலை: அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முதியவர் மின்சாரம் பாய்ந்து பலி

தினத்தந்தி
|
7 Sept 2022 1:16 PM IST

ஆரணி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முதியவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஏரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 74). இவர் இன்று அதிகாலையில் காலைகடன் கழிக்க ஏரிக்கு சென்றுள்ளார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த பிச்சாண்டி என்பவரின் நிலம் அருகில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக மின்கம்பி அறுந்து கிடந்தது.

இந்நிலையில் அங்கு சென்றா கோபால் மின்கம்பி அறுந்து கிடப்பது தெரியாமல் மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவடத்திலேயே பலியானார்.

முதியவர் உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்த களம்பூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்