< Back
மாநில செய்திகள்
பிரம்மதேசம் அருகேசாராயம் விற்ற முதியவர் கைது
விழுப்புரம்
மாநில செய்திகள்

பிரம்மதேசம் அருகேசாராயம் விற்ற முதியவர் கைது

தினத்தந்தி
|
30 Aug 2023 12:15 AM IST

பிரம்மதேசம் அருகே சாராயம் விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.

பிரம்மதேசம்,

பிரம்மதேசம் அருகே உள்ள பழமுக்கல் கிராமத்தில் சமூகவிரோதிகள் சிலர் வீடுகளில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக பிரம்மதேசம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் பழமுக்கல் கிராமத்துக்கு விரைந்து சென்று சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் பின்புறம் 10 லிட்டர் சாராயத்தை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், அதை பதுக்கி வைத்திருந்த பழமுக்கல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குப்புசாமி (வயது 75) என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்