திருச்சி
கொள்ளிடம் ஆற்றில் தவறி விழுந்து தத்தளித்த முதியவர் உயிருடன் மீட்பு
|கொள்ளிடம் ஆற்றில் தவறி விழுந்து தத்தளித்த முதியவர் உயிருடன் மீட்கப்பட்டன.
ஸ்ரீரங்கம்:
திருச்சியில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. குறிப்பாக கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சம் கன அடி நீர் செல்கிறது. இந்தநிலையில் ஸ்ரீரங்கத்துக்கு வந்திருந்த பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரை சேர்ந்த நல்லுகவுண்டர் (வயது 80) என்பவர் ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் சிறுநீர் கழிக்க சென்றார். அப்போது திடீரென ஆற்றில் தவறி விழுந்த அவரை தண்ணீர் இழுத்து சென்றது. இதனால் தண்ணீரில் தத்தளித்தவாறு சென்ற அவர், ஆற்றின் நடுவில் மின்கோபுரத்திற்காக அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு தூணை பிடித்து, அதன் மீது ஏறி அமர்ந்தார். பின்னர் தன்னை காப்பாற்றுமாறு அபயகுரல் எழுப்பினார். அருகில் இருந்தவர்கள் இது பற்றி ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்ேபரில் நிலைய அலுவலர் ஆரோக்கியசாமி தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் நல்லுகவுண்டரை பத்திரமாக மீட்டனர்.