< Back
மாநில செய்திகள்
சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவருக்கு 5 ஆண்டு சிறை
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவருக்கு 5 ஆண்டு சிறை

தினத்தந்தி
|
25 April 2023 3:25 PM IST

உத்திரமேரூர் அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தமிழரசி தீர்ப்பளித்தார்.

காஞ்சீபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த மானாமதி பகுதியைச் சேர்ந்தவர் அரசன் (வயது 58). இவர் மாமல்லபுரம் பகுதியில் பாசிமணிகளை விற்பனை செய்து வந்தார். கடந்த 2017-ந் ஆண்டு மாமல்லபுரம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் மீதான வழக்கு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் அரசன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுதியானதால் அவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10,000 ஆயிரம் அபராதம் விதித்தும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தமிழரசி தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்