< Back
மாநில செய்திகள்
காட்டெருமை தாக்கி முதியவர் படுகாயம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

காட்டெருமை தாக்கி முதியவர் படுகாயம்

தினத்தந்தி
|
26 Nov 2022 12:30 AM IST

பெரும்பாறை அருகே காட்டெருமை தாக்கி முதியவர் படுகாயம் அடைந்தனர்.

பெரும்பாறை அருகே உள்ள மீனாட்சி ஊத்து கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 65). இவர், நேற்று காலை வீட்டுக்கு பின்புறம் ஆடு மேய்த்து கொண்டு இருந்தார். அப்போது புதருக்குள் இருந்து வந்த காட்டெருமை அவரை தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரும்பாறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்