< Back
மாநில செய்திகள்
கோவூர் அருகே சாலையோர தடுப்பில் மொபட் மோதி முதியவர் பலி
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

கோவூர் அருகே சாலையோர தடுப்பில் மொபட் மோதி முதியவர் பலி

தினத்தந்தி
|
30 May 2023 2:15 PM IST

கோவூர் அருகே சாலையோர தடுப்பில் மொபெட் மோதி முதியவர் பலியானார்.

கொளத்தூரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 64), இவரது மகன் பிரகாஷ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்தவாசியில் நடந்த திருவிழாவில் கலந்து கொள்ள குடும்பத்துடன் சென்று விட்டனர். நேற்று காலை வந்தவாசியில் இருந்து மொபட்டில் தந்தை, மகன் இருவரும் வந்து கொண்டிருந்தனர். தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ், கோவூர் அருகே வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மொபட் சாலையோரம் இருந்த இரும்பு தடுப்பில் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் செல்வராஜ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து போனார்.

போக்குவரத்து நெரிசல்

பிரகாஷ் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்துபோன செல்வராஜின் மகள் தீபா திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

சம்பவ இடத்திற்கு வந்த அவர் இறந்து போன தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதது நெஞ்சை பதற வைத்தது. விபத்து காரணமாக தாம்பரம் - மதுரவாயல் பைபாசில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்