< Back
மாநில செய்திகள்
உள்ளகரத்தில் பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்து முதியவர் பலி
சென்னை
மாநில செய்திகள்

உள்ளகரத்தில் பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்து முதியவர் பலி

தினத்தந்தி
|
23 Feb 2023 12:46 PM IST

உள்ளகரத்தில் பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்து முதியவர் உயிரிழந்தார்.

சென்னையை அடுத்த உள்ளகரம் மேடவாக்கம் பிரதான சாலையில் மெட்ரோ ரெயில் திட்டப்பணி நடைபெறுகிறது. இதற்காக அப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழாய்களை சாலை ஓரமாக மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதற்காக தோண்டப்பட்ட சுமார் 5 அடி ஆழம் கொண்ட கான்கிரீட் பள்ளத்தில் உள்ளகரம் பாலம்மாள் நகரை சேர்ந்த நாராயணன் (வயது 74) என்ற முதியவர் நிலை தடுமாறி விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர், குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இது குறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்