< Back
மாநில செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி
திண்டுக்கல்
மாநில செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி

தினத்தந்தி
|
21 Sept 2023 1:15 AM IST

எரிேயாடு அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலியானார்.

எரியோடு அருகே புதுரோடு பகுதியில், தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் கிணற்றுக்குள் எட்டி பார்த்தனர். அங்கு ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கும், எரியோடு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கிணற்றில் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டனர். விசாரணையில் அவர், புதுரோடு பகுதியை சேர்ந்த ராமசாமி (வயது 81) என்று தெரியவந்தது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு அவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
மேலும் செய்திகள்