< Back
மாநில செய்திகள்
தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி முதியவர் பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி முதியவர் பலி

தினத்தந்தி
|
25 April 2023 12:18 PM IST

திருவாலங்காடு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி முதியவர் பலியானார்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ரெயில் நிலையத்தில் நேற்று 60 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் அடிபட்டு இறந்து கிடப்பதாக திருவள்ளூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற ரெயில்வே போலீசார் சடலத்தை மீட்டு, அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் இறந்த முதியவர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தாலுகா தக்கோலம் மண்டபம் தெருவை சேர்ந்த விவசாயி லோகநாதன் (வயது 61) என்பதும், இவர் நேற்று சின்னம்மாபேட்டை பஜாரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்ல திருவாலங்காடு ரெயில் நிலைய கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, சரக்கு ரெயில் மோதி இறந்தார் என்பது தெரிய வந்தது. இது குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்