< Back
மாநில செய்திகள்
கோவில்பட்டியில்ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கோவில்பட்டியில்ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி

தினத்தந்தி
|
10 Oct 2023 12:15 AM IST

கோவில்பட்டியில்ரெயிலில் அடிபட்டு முதியவர் பலியானார்.

கோவில்பட்டி (மேற்கு):

கோவில்பட்டி வேலாயுதபுரம் ரெயில்வே தண்டவாள பகுதியில் 70 வயது முதியவர் நேற்று மாலையில் நெல்லை- தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக, ெரயில் நிலைய அதிகாரி தூத்துக்குடி ெரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதை தொடர்ந்து ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நாராயணன்ஸமற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். ரெயிலில் அடிபட்டு இறந்த முதியவர் நீல நிறத்தில் கைலியும், மஞ்சள் நிறத்தில் அரைக்கை சட்டையும் அடைந்திருந்தார். அவர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர்? தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முதியவர் பிணத்தை ரெயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்