< Back
மாநில செய்திகள்
சாலையை கடக்க முயன்ற முதியவர் கார் மோதி பலி
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

சாலையை கடக்க முயன்ற முதியவர் கார் மோதி பலி

தினத்தந்தி
|
2 Aug 2022 11:05 PM IST

சாலையை கடக்க முயன்ற டிரைவர் கார் மோதி பலியானார்.

ஜோலார்பேட்டை

சாலையை கடக்க முயன்ற டிரைவர் கார் மோதி பலியானார்.

நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் முனியூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 75). விவசாயி. சம்பவத்தன்று இவர் நந்தி பெண்டா கிராமத்திற்கு செல்ல வெலக்கல்நத்தம் பஸ் நிறுத்தத்திற்கு பஸ்சில் சென்று இறங்கினார். பின்னர் அங்கிருந்து சாலையை கடந்து மறு பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வேலூர் நோக்கி வந்த கார் தேசிய நெடுஞ்சாலையில் கடக்க முயன்ற பெரியசாமி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவக் மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார்.

இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலிசார் வழக்குப்பதிவு செய்து பெரியசாமியின் உடலை மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக காரை ஓட்டி வந்த சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ரவியிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்