< Back
மாநில செய்திகள்
மனைவி நினைவு தினத்தில் கல்லறைக்கு மாலை அணிவித்து தற்கொலை செய்து கொண்ட முதியவர்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மனைவி நினைவு தினத்தில் கல்லறைக்கு மாலை அணிவித்து தற்கொலை செய்து கொண்ட முதியவர்

தினத்தந்தி
|
13 July 2023 12:31 AM IST

உவரி அருகே முதியவர் ஒருவர் மனைவி நினைவு தினத்தில் அவரது கல்லறைக்கு மாலை அணிவித்து தற்கொலை செய்து கொண்டார்.

திசையன்விளை:

உவரி அருகே நவ்வலடி ரேஷன் கடை தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது 70). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி கோகிலா இறந்துவிட்டார். நேற்று முன்தினம் அவரது இரண்டாம் ஆண்டு நினைவுநாள் ஆகும். மனைவி இறந்தபிறகு ஊரில் தனியாக வசித்து வந்தார். அவரது மகன் அரிஸ் பொள்ளாச்சி லட்சுமிபுரத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். 2 மகள்கள் உள்ளனர் அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மனைவி இறந்தது முதல் மன உளைச்சலில் இருந்த கோபால் நேற்று முன்தினம் மனைவி கல்லறைக்கு சென்று மாலை அணிவித்தார். பின்னர் அங்கேயே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் குறித்து அவரது மகன் அரிஸ் உவரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்