< Back
மாநில செய்திகள்
குடும்ப தகராறில், மனைவியை அடித்து கொன்ற முதியவர்
மாநில செய்திகள்

குடும்ப தகராறில், மனைவியை அடித்து கொன்ற முதியவர்

தினத்தந்தி
|
7 March 2024 10:53 PM IST

குடும்ப தகராறில், மனைவியின் தலையை சுவற்றில் மோத வைத்து கணவர் கொலை செய்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்,

திண்டுக்கல், அங்குவிலாஸ் இறக்கம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. 55 வயதான லட்சுமிக்கும் அவரது கணவர் முத்தையாவிற்கும் இடையே சொத்துக்களை விற்பது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த தகராறு குடும்ப தகராறாகி இருவரும் அடிக்கடி மோதி வந்த நிலையில், சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மனைவியை தாக்கிய முத்தையா, அவரின் தலையை சுவரில் மோத வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், லட்சுமியின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், முதியவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்