பெரம்பலூர்
கோவில் திருவிழாவில் பட்டாசு வெடிக்க எதிர்ப்பு தெரிவித்து முதியவர் தற்கொலை முயற்சி
|கோவில் திருவிழாவில் பட்டாசு வெடிக்க எதிர்ப்பு தெரிவித்து முதியவர் தற்கொலை முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள மேட்டுச்சேரி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அடுத்த வாரம் திருவிழா நடத்த அந்த பகுதி மக்கள் முடிவு செய்தனர். இந்நிலையில் கோவிலுக்கு அருகே குடியிருக்கும் அதே ஊரை சேர்ந்த கந்தசாமி (வயது 67) என்பவர் திருவிழாவின்போது தனது வீட்டின் முன்பு பட்டாசு வெடிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து, போலீசில் புகார் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து விழா குழுவினர், கோவில் திருவிழாவின்போது பட்டாசு வெடிக்கக்கூடாது என்று ஏன் போலீசில் புகார் கொடுத்தாய்? நீ கோவிலுக்கு வர மாட்டாயா? என்று கேட்டுள்ளனர்.
இதனால் மனமுடைந்த கந்தசாமி நேற்று உடலில் மண்எண்ெணயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.