< Back
மாநில செய்திகள்
பஸ்சின் படிக்கட்டில் அமர்ந்து ஆபத்தான பயணம் செய்த மூதாட்டி - சமூக வலைதளங்களில் வீடியோ பரவியதால் பரபரப்பு
சென்னை
மாநில செய்திகள்

பஸ்சின் படிக்கட்டில் அமர்ந்து ஆபத்தான பயணம் செய்த மூதாட்டி - சமூக வலைதளங்களில் வீடியோ பரவியதால் பரபரப்பு

தினத்தந்தி
|
31 Aug 2022 2:21 PM IST

செங்கல்பட்டில் மாநகர பஸ்சின் படிக்கட்டில் மூதாட்டி ஒருவர் ஆபத்தான முறையில் அமர்ந்தபடி பயணம் செய்வதுபோல் சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது. இந்த வீடியோவை பார்த்தவர்கள், அதிர்ச்சி அடைந்தனர்.

செங்கல்பட்டு வண்ணாரத்தெருவைச் சேர்ந்த அந்த மூதாட்டியின் பெயர் கமலம்மாள். 70 வயதான அவர், தனது வீட்டில் இருந்து வெளியே வரும்போது கால் இடறி கீழே விழுந்துவிட்டார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதற்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரது இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. இதற்காக இடது கையில் கட்டு போட்டு சிகிச்சை அளித்த டாக்டர்கள் பின்னர் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள பஸ் நிலையத்துக்கு வந்த மூதாட்டி கமலம்மாள், மணப்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மாநகர பஸ்சில் ஏறி உள்ளே செல்லாமல் 2-வது படிக்கட்டிலேயே அமர்ந்தபடி சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்தது விசாரணையில் தெரிந்தது. அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர், மூதாட்டியின் இந்த ஆபத்தான பயணத்தை தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோதான் வைரலாக பரவியது தெரிந்தது.

மேலும் செய்திகள்