< Back
மாநில செய்திகள்
சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி
சென்னை
மாநில செய்திகள்

சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி

தினத்தந்தி
|
29 Nov 2022 1:36 PM IST

சென்னையை அடுத்த மேடவாக்கத்தில் சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலியானார்.

சென்னையை அடுத்த மேடவாக்கம் வெள்ளக்கல் ராமதாஸ் தெருவை சேர்ந்தவர் நரசிம்மன். இவருடைய மனைவி சுசிலா (வயது 65). இவர், கடந்த 10-ந் தேதி வீட்டில் உள்ள பூஜை அறையில் சாமி கும்பிட கற்பூரம் ஏற்றினார்.

அப்போது எதிர்பாராதவிதமாக சுசிலாவின் சேலையில் தீப்பிடித்தது. தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியது. வலியால் அலறி துடித்த அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுசிலா பரிதாபமாக இறந்தார். இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்