< Back
மாநில செய்திகள்
2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த இஸ்திரி கடைக்காரர் பலி
சென்னை
மாநில செய்திகள்

2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த இஸ்திரி கடைக்காரர் பலி

தினத்தந்தி
|
29 Nov 2022 1:11 PM IST

சென்னை வண்ணாரப்பேட்டையில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த இஸ்திரி கடைக்காரர் பலியானார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சங்கர் (வயது 41). இவர் இஸ்திரி கடை வைத்து உள்ளார். இவருடைய மனைவி கற்பகவல்லி (37). இவர்கள் சென்னை வண்ணாரப்பேட்டை செல்லப்பா காலனியில் உள்ள பெற்றோரை பார்க்க வந்தனர். நேற்று முன்தினம் காலையில் இருந்து மது போதையில் இருந்த சங்கர், இரவு தூங்க செல்லும்போது கால் தவறி வீட்டின் 2-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த சங்கர், பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்