நாகப்பட்டினம்
தரைப்பாலத்தில் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டது
|தினத்தந்தி செய்தி எதிரொலியாக திட்டச்சேரியில் தரைப்பாலத்தில் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டது.
திட்டச்சேரி:
தினத்தந்தி செய்தி எதிரொலியாக திட்டச்சேரியில் தரைப்பாலத்தில் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டது.
தரைப்பாலம்
திட்டச்சேரியில் நயினார் குளத்தெருவில் தரைப்பாலம் அமைந்துள்ளது. இந்த தரைப்பாலம் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பாலம் வழியாக நயினார் குளத்தெரு, துண்டம், கோதண்டராஜபுரம், அனந்தநல்லூர், கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திட்டச்சேரி பஸ்நிலையம், வங்கிகள், தபால்நிலையம், கிராம நிர்வாக அலுவலகம் என உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது
இந்த நிலையில் தரைப்பாலத்தின் இருபக்க தடுப்புச்சுவர்களும் இடிந்து விழுந்து ஆபத்தான நிலையில் இருந்தது.இதனால் இந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தடுமாறி வாய்க்காலில் விழும் அபாய நிலை இருந்தது. இதை சரி செய்ய அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இரும்பு தடுப்பு அமைப்பு
இதுகுறித்து செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் கடந்த 19-ந் தேதி படத்துடன் வெளிவந்தது. இதன் எதிரொலியாக தரைப்பாலத்தில் இரும்பிலானா தடுப்பு அமைக்கப்பட்டது.
உடன் நடவடிக்கை எடுத்து தரைப்பாலத்தில் இரும்பு தடுப்பு அமைத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழ்க்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.