< Back
மாநில செய்திகள்

மாநில செய்திகள்
மருங்கூர் அகழாய்வில் கண்ணுக்கு மை தீட்டும் செம்பு அஞ்சனக்கோல் கண்டெடுப்பு

24 July 2024 7:35 PM IST
மருங்கூர் அகழாய்வில் கண்ணுக்கு மை தீட்ட உபயோகப்படுத்தப்படும் செம்பு அஞ்சனக்கோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கடலூர் மாவட்டம் மருங்கூர் அகழாய்வில் கண்ணுக்கு மை தீட்ட உபயோகப்படுத்தப்படும் செம்பினால் ஆன அஞ்சனக்கோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
கடலூர் மாவட்டம் மருங்கூர் அகழாய்வில் ராசராசன் காலச் செம்புக் காசு, சுடுமண்ணால் ஆன வட்டச்சில்லுகள், பச்சை நிறக் கண்ணாடி மணி, ரெளலட்டட் வகைப் பானை ஓடுகள் போன்ற தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன.
கண்களுக்கு மை தீட்டுவதற்கு உபயோகப்படுத்தப்படும் செம்பினால் ஆன அஞ்சனக்கோல் 127 செ.மீ ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த அஞ்சனக்கோல் 4.7செ.மீ நீளமும் 3.6 கிராம் எடையும் கொண்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.