< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்

கள்ளக்காதலியை சிக்க வைக்க 25 பக்க கடிதம் எழுதிவிட்டு மனைவி, மகளுக்கு நிலவேம்பு கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற முன்னாள் ராணுவ வீரர்- 3 பேர் உடல்கள் மீட்பு சம்பவத்தில் திடுக்கிடும் திருப்பம்

தினத்தந்தி
|
29 Sept 2023 2:08 AM IST

பிரிந்து சென்றதால் கள்ளக்காதலியை போலீசில் சிக்க வைப்பதற்காக நிலவேம்பு கசாயத்தில் விஷம் கலந்து மனைவி, மகளை கொன்றுவிட்டு, தானும் குடித்து தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.


பிரிந்து சென்றதால் கள்ளக்காதலியை போலீசில் சிக்க வைப்பதற்காக நிலவேம்பு கசாயத்தில் விஷம் கலந்து மனைவி, மகளை கொன்றுவிட்டு, தானும் குடித்து தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

பூட்டிய வீட்டுக்குள் 3 பேர் பிணம்

மதுரை புதூரை அடுத்த சர்வேயர்காலனி ஆவின் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). முன்னாள் ராணுவ வீரரான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி விஷாலினி (36). மகள் ரமிசாஜாஸ்பெல் (12). 7-ம் வகுப்பு மாணவி. இவர்கள் வாடகை வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வந்தனர். கடந்த 26-ந் தேதி மதியம் தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து வந்தனர். அதன் பின்னர் அவர்களது வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த வீட்டில் துர்நாற்றம் வீசியது. தகவல் அறிந்து தல்லாகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு ரமேஷ், அவருடைய மனைவி, மகள் ஆகிய 3 பேரும் பிணமாக கிடந்தது தெரியவந்தது. உடல்களை பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

கள்ளக்காதல்

பிரேத பரிசோதனை முடிந்ததும் நேற்று மதியம் 3 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசாரிடம் கேட்ட போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதுபற்றி போலீசார் கூறியதாவது:-

முன்னாள் ராணுவ வீரர் ரமேஷ், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததில் நஷ்டம் ஏற்பட்டது. அதிக கடன் ஏற்பட்டதால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் ரமேஷ் எழுதிய 25 பக்க கடிதத்தின் அடிப்படையில் விசாரணையை நடத்தினோம். ரமேஷ் ராணுவத்தில் இருந்து வந்ததும் தொழில் தொடங்க ஆன்லைன் மூலம் தகவல்களை தேடிய போது நரிமேட்டை சேர்ந்த ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. பின்னர் இருவரும் சேர்ந்து தொழில் செய்து வந்தனர். அதில் அவர்கள் இருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பிரிந்து சென்றார்

நாளடைவில், அந்தப்பெண் அவரை விட்டு விலகினார். வீட்டையும் மாற்றம் செய்து செல்போன் எண்ணையும் மாற்றினார். அந்தப் பெண் பிரிந்து சென்றது ரமேஷின் மனநிலையை பாதித்தது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணை அவர் சந்தித்துள்ளார். தன்னிடம் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு வற்புறுத்தியதை அந்தப் பெண் ஏற்றுக் கொள்ளவில்லை.

மேலும் நீ என்னுடன் இருக்காவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று ரமேஷ் மிரட்டி உள்ளார். ஆனால் அந்தப் பெண் நாம் இருவருக்கும் ஒத்துவராது என்று கூறி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மன வருத்தம் அடைந்த ரமேஷ் அந்த பெண்ணை போலீசில் மாட்டி விட வேண்டும் என்று எண்ணினார். மேலும் தான் மட்டும் தற்கொலை செய்து கொண்டால் அது பெரிய விஷயமாக தெரியாது. ஆனால் குடும்பத்தோடு சேர்த்து பிணமாக கிடந்தால் அந்த பெண்ணை போலீசார் பிடித்து விடுவார்கள் என்று எண்ணினார்.

நிலவேம்பில் விஷம் கலந்தார்

இதை தொடர்ந்து சம்பவத்தன்று நிலவேம்பு கசாயத்தில் பூச்சி மருந்தை கலந்து தனது மனைவியும், மகளுக்கும் கொடுத்துள்ளார்.மேலும், டெங்கு அதிகமாக பரவுவதால் நிலவேம்பு கசாயம் குடிக்க வேண்டும் என்று கூறி மனைவி, மகளை நம்ப வைத்துள்ளார். கள்ளக்காதலியை பழிவாங்குவதாக நினைத்து ரமேஷ் விஷம் ெகாடுக்கிறார் என்பதை அறியாத அவருடைய மனைவியும், மகளும் மருந்து என நினைத்து விஷத்தை குடித்துள்ளனர்.அதன் பின்னர் ரமேசும் விஷத்தை குடித்துள்ளார். பின்னர் 3 ேபரும் ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்துள்ளனர். ரமேசின் கள்ளக்காதலுக்கு அவருடைய மனைவி, மகளும் பலியானது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் கள்ளக்காதலியை சிக்க வைக்க அவரைப்பற்றி அவதூறாக கடிதத்தில் ரமேஷ் எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்திருக்கலாம் எனவும் போலீசார் கருதுகிறார்கள். இதுதொடர்பாக அந்த பெண்ணிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்