< Back
மாநில செய்திகள்
ஆடு மீது பைக் மோதிய பிரச்சனையில் துப்பாக்கியை காட்டி விவசாயியை மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர் கைது
மாநில செய்திகள்

ஆடு மீது பைக் மோதிய பிரச்சனையில் துப்பாக்கியை காட்டி விவசாயியை மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர் கைது

தினத்தந்தி
|
2 March 2023 12:31 PM IST

திருச்சி மாவட்டம் கே.உடையாபட்டி பகுதியில், துப்பாக்கியை காட்டி, விவசாயியை மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி ,

திருச்சி மாவட்டம் கே.உடையாபட்டி பகுதியில், துப்பாக்கியை காட்டி, விவசாயியை மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். விவசாயி ராஜ்குமார் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற போது, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஜான் பிரிட்டோவின் பைக், ஆட்டின் மீது மோதியுள்ளது.

இது குறித்து ராஜ்குமார் கேட்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்து சென்ற ஜான் பிரிட்டோ, துப்பாக்கியுடன் வந்து, ராஜ்குமாரை மிரட்டியுள்ளார்.

இது தொடர்பான புகாரின் பேரில், ஜான் பிரிட்டோவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, 2 தோட்டாக்களுடன் கை துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்