< Back
மாநில செய்திகள்
செல்போனில் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
சென்னை
மாநில செய்திகள்

செல்போனில் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
30 April 2023 2:24 PM IST

ஆவடி அருகே கல்லூரிக்கு செல்லாமல் செல்போனில் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆவடி அடுத்த விவேகானந்தா நகர் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மகன் தினேஷ் குமார் (வயது 19). இவர் பூந்தமல்லி அருகே உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு போகாமல் வீட்டில் இருந்து கொண்டு செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட மாணவரின் தந்தை குருமூர்த்தி அவரை கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு படுக்கையறைக்கு சென்ற தினேஷ்குமார் மறுநாள் காலையில் நீண்ட நேரமாகியும் எழுந்து வராததால் சந்தேகமடைந்த குருமூர்த்தி அழைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தினேஷ்குமார் மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து உடனடியாக அவரை மீட்டு ஆவடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து அறிந்த ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று தினேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்