< Back
தமிழக செய்திகள்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி மாவட்டக் கல்வி அலுவலக ஊழியர் பலி
தமிழக செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மாவட்டக் கல்வி அலுவலக ஊழியர் பலி

தினத்தந்தி
|
2 July 2022 3:24 PM IST

தூசி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மாவட்டக் கல்வி அலுவலக ஊழியர் உயிரிழந்தார்.

தூசி,

காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்கார் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய சாரதி(வயது37). இவர் திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலகத்தில் தொகுப்பு ஊதிய ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சந்தான முருகராமி (36) என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

இவர் தினந்தோறும் திருவண்ணாமலைக்கு வேலைக்கு செல்லும் போது இவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சென்று அப்துல்லாபுரம் கூட்டு சாலையில் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு அதன் பின்பு பஸ் திருவண்ணாமலைக்கு செல்வார்.

அத போல் வேலை முடித்து வந்து அப்துல்லாபுரம் கூட்டு சாலையில் விட்ட வண்டி எடுத்து வீட்டுக்கு வருவது வழக்கம். இதே போல் நேற்று இரவு 10:30 மணி அளவில் இவர் வேலை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வரும்போது அப்துல்லாபுரம் மின்வாரிய அலுவலகம் எதிரில் அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த தூக்கி வீசப்பட்டதில் விஜய சாரதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்