< Back
மாநில செய்திகள்
தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

தினத்தந்தி
|
2 April 2023 2:26 PM IST

மீஞ்சூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் ரெயில் தண்டவாளத்தை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றபோது ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளி ஊராட்சியில் எண்ணூர் காமராஜர் துறைமுகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இந்தியன் ஆயில் எல்.என்.ஜி என்ற தனியார் நிறுவனத்தின் பாதுகாப்பு அலுவலராக தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த சின்னசாமி (வயது 55) என்பவர் மீஞ்சூரில் தங்கி வேலை செய்து வந்தார்.

நேற்று இவர் வேலைக்கு மோட்டார் சைக்கிளில் மீஞ்சூர் ரெயில்வே கேட் வழியாக சென்றார். அப்போது அந்த வழியாக ரெயில் வந்ததால் ரெயில்வே கேட் போடப்பட்டிருந்தது. சின்னசாமி ரெயில்வே கேட் அருகே இருந்த சிறிய நடைபாதை வழியாக மோட்டார் சைக்கிளில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக வந்த மின்சார ரெயிலில் மோட்டார் சைக்கிள் மீது மோதி தூக்கி வீசப்பட்ட சின்னசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சின்னசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்