< Back
மாநில செய்திகள்
திருத்தணியில் வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருத்தணியில் வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

தினத்தந்தி
|
26 Aug 2022 1:47 PM IST

திருத்தணியில் வாகனம் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் தொழுதாவூர் ஊராட்சி மணவூர் சாலையை சேர்ந்தவர் கிரண்குமார் (வயது 30). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் பணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சின்னம்மாபேட்டை உயர்மட்ட பாலம் அருகே சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி கிரண்குமார் உயிரிழந்தார்.

இதுகுறித்து திருவாலங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்