< Back
மாநில செய்திகள்
மாங்காடு அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

மாங்காடு அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
6 April 2023 4:00 PM IST

மாங்காடு அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகராறு

மாங்காடு, சீனிவாசா நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38), பருத்திப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுகன்யா (29), நேற்று முன்தினம் மனைவியின் இருசக்கர வாகனத்தை பழுது பார்த்துவிட்டு வீட்டுக்கு சுரேஷ் மது போதையில் வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் மனைவியை தாக்கியதாகவும் அதில் அவர் மயங்கி கீழே விழுந்ததாகவும் தெரிகிறது. இதனால் பதறி போன சுரேஷ் வீட்டின் அறைக்குள் சென்று தூக்குப்போட்டு கொண்டார்.

தற்கொலை

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சத்தம் போட்டதைடுத்து அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து மயங்கிய நிலையில் இருந்த சுரேசை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சுரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மாங்காடு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்