< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
|20 Nov 2022 6:01 PM IST
ஆவடி அருகே மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் மணிகண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 38). இவர், பாடியில் தனியார் கொரியர் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி மாலதி (26). இவர்களுக்கு பிரதிக்சா (4) என்ற மகள் இருக்கிறாள். தீபாவளி விடுமுறைக்கு பிறகு செந்தில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததுடன், அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாலதி, தனது குழந்தையை அழைத்துக்கொண்டு கரூர் மாவட்டத்தில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் விரக்தியடைந்த செந்தில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.