< Back
மாநில செய்திகள்
மனைவி கண்டித்ததால் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மனைவி கண்டித்ததால் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
12 Aug 2022 2:11 PM IST

திருவள்ளூர் அருகே மனைவி கண்டித்ததால் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் குமரன் நகரை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 34). தனியார் நிறுவன ஊழியர். கடந்த சில மாதங்களாக அன்பரசன் மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.

இது குறித்து அவரது மனைவி அனுசுயா (24) ஏன் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு சுற்றுகிறீர்கள் என்று தட்டி கேட்டார். இதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 29-ந்தேதியன்று அன்பரசன் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதை பார்த்த அவரது வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து பின்னர் வீடு திரும்பினர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த அன்பரசன் தன்னுடைய அறைக்கு சென்று அங்கு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி அனுசுயா மணவாள நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து இறந்த அன்பரசனின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்