< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் சாவு
|7 May 2023 2:36 AM IST
விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்
மதுரை திருநகர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 57), தனியார் நிறுவன ஊழியர். நேற்று இவர் மோட்டார் சைக்கிளில் பழங்காநத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பஸ்சை முந்தி செல்ல முயன்றார். அப்போது நிலை தடுமாறி நடராஜன் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். அந்த நேரத்தில் தனியார் பஸ் அவர் மீது ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.