< Back
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

தினத்தந்தி
|
6 Oct 2023 12:15 AM IST

தூத்துக்குடி அருகே மின்சாரம் தாக்கி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் சவேரியார்புரம் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருடைய மகன் பாலசுப்பிரமணியன் (வயது 34). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பிட்டராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று பாலசுப்பிரமணியன் அங்குள்ள ஒரு கன்டெய்னரில் உள்ள பழுதுகளை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது மின்சார சுவிட்சை போட்டபோது, எதிர்பாராத விதமாக அவர் மின்சாரம் தாக்கி பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பாலசுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த பாலசுப்பிரமணியனுக்கு இசக்கியம்மாள் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்