< Back
தமிழக செய்திகள்
மரத்தில் இருந்து விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலி
கன்னியாகுமரி
தமிழக செய்திகள்

மரத்தில் இருந்து விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பலி

தினத்தந்தி
|
31 Jan 2023 2:00 AM IST

அருமனை அருகே மரத்தில் இருந்து விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

அருமனை,

அருமனை அருகே மரத்தில் இருந்து விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

வாலிபர்

அருமனை அருகே உள்ள சிற்றார் மல்லமுத்தங்கரை ஆதிவாசி கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மகன் சந்தோஷ்குமார் (வயது35). இவர் ஐ.ஐ.டி. தொழிற்பயிற்சி முடித்தவர். தற்போது நாகர்கோவிலில் தங்கி இருந்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சந்தோஷ்குமார் தன்னுடைய வீட்டுக்கு வந்தார். வீட்டின் அருகே உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக ஏறினார். தேங்காய் பறித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

பரிதாப சாவு

அவரை உறவினர்கள் மீட்டு குலசேகரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சந்தோஷ் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுசம்பந்தமாக கடையல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த சந்தோஷ் குமாருக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவி உள்ளார்.

மேலும் செய்திகள்