< Back
மாநில செய்திகள்
திருவாலங்காடு அருகே மாட்டு வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதி எலக்ட்ரீசியன் பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவாலங்காடு அருகே மாட்டு வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதி எலக்ட்ரீசியன் பலி

தினத்தந்தி
|
30 April 2023 3:01 PM IST

திருவாலங்காடு அருகே மாட்டு வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் பலியானார்.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம் கோதண்டராமபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந் (வயது 27). இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். கடந்த 26-ந்தேதி இரவு இவர் தனது தங்கை பிரியங்காவுடன் (24) மோட்டார் சைக்கிளில் திருத்தணி பஜார் வீதிக்கு சென்று விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பூனிமாங்காடு பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது இருட்டில் முன்னே சென்றுக்கொண்டிருந்த மாட்டு வண்டியின் மீது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பிரசாந், பிரியங்கா இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்து பிரசாந்தை மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பிரசாந்த் உயிரிழந்தார். பிரசாந்தின் தங்கை பிரியங்கா திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்