< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
முக கவசத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
|6 April 2023 2:47 PM IST
முக கவசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், நர்சுகள், பொதுமக்களிடம் முக கவசம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் முகக் கவசம் அணிவதை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு அரசு கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் நாராயணசாமி பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முக கவசத்தை கண்டிப்பாக அணிய வேண்டும். அப்படி அணிவதால் நோய் தொற்றில் இருந்து நம்மை நாம் காப்பாற்றி கொள்ளலாம் என்று அறிவுரைகளை வழங்கினார்.